கிருஷ்ணராயபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
கிருஷ்ணராயபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம்,
வக்கீல்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி கிருஷ்ணராயபுரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட போவதாகவும், இதுகுறித்து மாவட்ட நீதிபதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, பதிவாளர் ஆகியோர் புகார் மனு அளிப்பது என கடந்த வாரம் குளித்தலையில் நடந்த வக்கீல் சங்க அவசர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளாமல் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான பணிகள் எதுவும் நடக்காமல் பாதிக்கப்பட்டது. இதனால் வழக்காடிகள் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story