திங்கள்சந்தை அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி


திங்கள்சந்தை அருகே  ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 16 May 2022 11:17 PM IST (Updated: 16 May 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தை அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி

திங்கள்சந்தை, 
இரணியல் அருகே உள்ள பரசேரியை சேர்ந்தவர் பத்மதாஸ் (வயது36). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தர்ஷினி (33). இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. தர்ஷினி நேற்று மாலையில் பேயன்குழியில் உள்ள ஒரு வங்கிக்கு ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அங்கிருந்து பரசேரி நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். நுள்ளிவிளை குருசடி அருகில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தர்ஷினி கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கிய சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடைேய லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே, அங்கு நின்ற பொதுமக்களில் சிலர் லாரியை துரத்தி சென்று தோட்டியோட்டில் வைத்து மடக்கி பிடித்தனர். ெதாடர்ந்து லாரி டிரைவரை பிடித்து இரணியல் போலீசில் ஒப்படைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரி டிைரவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story