முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு


முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 17 May 2022 12:00 AM IST (Updated: 16 May 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாகூர்:
நாகூர் அருகே வடக்கு பால்பண்ணை சேரியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 84).இவர் நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் நாகூர்-நாகை மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ராஜமாணிக்கம் கால் எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  ராஜமாணிக்கம்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story