அகழாய்வில் கிடைத்த சுடுமண் குவளை


அகழாய்வில் கிடைத்த சுடுமண் குவளை
x
தினத்தந்தி 16 May 2022 11:33 PM IST (Updated: 16 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே அகழாய்வில் சுடுமண் குவளை கிடைத்தது.

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேற்று முன்தினம் யானை தந்தத்தால் செய்தஅழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் கிடைத்தன..
இந்த நிலையில் நேற்று அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் குவளை, வீடுகளில் தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்திய விளக்குகள் கிடைத்தன.  இதற்கிடையே அகழாய்வுக்காக தோண்டிய .7-வது குழியில் கிடைத்த 6 மண்பானைகளை சேதமடையாமல் எடுக்க தொல்லியல்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

Next Story