எரிவாயு தகன மேடை 3 நாட்கள் மூடல்
தேனியில் பராமரிப்பு பணிகளுக்காக எரிவாயு தகன மேடை 3 நாட்கள் மூடப்படுகிறது.
தேனி:
தேனி பள்ளிவாசல் தெருவில் கொட்டக்குடி ஆற்றங்கரையில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. அல்லிநகரம் கிராம கமிட்டி சார்பில் இந்த தகன மேடை பராமரிப்பு செய்யப்படுகிறது. இங்கு ஒரு பெண் தொழிலாளி உள்பட 5 பேர் பணியாற்றி வருகின்றனர். முதல் பிணத்தை தகனம் செய்வதற்கு 2 மணி நேரம் ஆகும். விறகுகளை எரித்து அதன் எரிவாயு மூலம் தகனம் செய்யப்படுவதால் முதல் பிணத்துக்கு மட்டும் கூடுதல் நேரம் ஆகும். தகன மேடை வெப்பமாகி பிணம் தகனம் செய்யப்பட்ட பின்பு, அடுத்த பிணத்தை 50 நிமிடத்தில் இருந்து 1 மணி நேரத்தில் தகனம் செய்ய முடியும். இந்த எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தகனமேடை நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. எனவே, பராமரிப்பு பணிகள் முடியும் வரை அங்குள்ள மயானத்தில் தற்காலிகமாக விறகுகள் வைத்து பிணத்தை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எரிவாயு தகன மேடையில் பிணத்தை எரிக்க ஆம்புலன்ஸ் வாடகை உள்பட ரூ.2,800 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விறகு வைத்து எரிப்பதற்கு ரூ.4,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கிராம கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story