கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x

கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காரைக்குடி, 
கல்லல், காரைக்குடி பகுதியில்  கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
கல்லல் அருகே உள்ள பாகனேரி பாரதவிநாயகர் கோவில் காவடி எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் பாகனேரி-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 22 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்னமாடு வண்டிபந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. 
முதலில் நடைபெற்ற பெரியமாடு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு தேனி மாவட்டம் கொம்பை பகுதியை சேர்ந்த ராமையா மற்றும் பாகனேரி காளைலிங்கம் வண்டியும், 2-வது பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு மற்றும் மங்கலத்து மகாராஜா வண்டியும், 3-வது பரிசை கம்பம் பேச்சியம்மாள் மற்றும் பாகனேரி ரவிவிக்னேஷ்வரா வண்டியும், 4-வது பரிசை ஆலவிளாம்பட்டி முத்துலெட்சுமி மற்றும் ஓக்கூர் அண்ணாநகர் கணேஷ் போர்வெல் வண்டியும் பெற்றன. 
பின்னர் நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் மற்றும் பரவை சீலைக்காரி அம்மன் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி சின்னதிருஞானம், பெரிய திருஞானம் வண்டியும், 3-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டி மற்றும் திருமலை கண்ணன் வண்டியும், 4-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும் பெற்றன.
காரைக்குடி 
இதேபோல் காரைக்குடி அருகே தேத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள தேவிசக்தி விநாயகர் கோவில் சந்தன காப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காரைக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 29 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாடு வண்டி பந்தயம், சின்னமாடு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாடு வண்டி போட்டியில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கோட்டையூர் சுதன் வண்டியும், 2-வது பரிசை பீர்கலைக்காடு பைசல் வண்டியும், 3-வது பரிசை தேத்தாம்பட்டி கரு.நாகலிங்கம் மற்றும் கானாடுகாத்தான் அருள் வண்டியும், 4-வது பரிசை கானாடுகாத்தான் சோலையாண்டவர் அருண் வண்டியும் பெற்றது. 
இறுதியாக நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி கிராமத்தை சேர்ந்த முரளிதரன் வண்டியும், 2-வது பரிசை பள்ளத்தூர் ஹரிகிருஷ்ணன் வண்டியும், 3-வது பரிசை கம்பம் குமார் வண்டியும், 4-வது பரிசை தேத்தாம்பட்டி கரு.நாகலிங்கம் மற்றும் கானாடு காத்தான் அருண்அம்பலம் வண்டியும், 5-வது பரிசை சின்ன ஊடுசேரி சந்தானி வண்டியும் பெற்றன.

Next Story