பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 May 2022 11:42 PM IST (Updated: 16 May 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்,

விருதுநகர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படித்து வரும் 16 வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாயார் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது உறவினரான பாண்டியன் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ்(வயது 19) என்பவரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்கிக் கொடுத்திருந்த நிலையில் ரமேசுடன் செல்போனில் பேசியபோது அவர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். 
இதனால் பள்ளிக்கு செல்லாத நாட்களில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாணவியின் வீட்டில் வைத்தும், தனது வீட்டிற்கு வரச்சொல்லியும் அவருடன் ரமேஷ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தனர்.
அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுமாறு கூறிய போது அதற்கு மறுத்த நிலையில் மனக்குழப்பத்தில் இருந்த சிறுமி, குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாள். 
பாதிக்கப்பட்ட சிறுமி, அனைத்து மகளிர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story