பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்கு
தேனி அருகே காதல் திருமணம் செய்து குழந்தை பெற்றெடுத்த சிறுமி விவகாரத்தில் பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே டொம்புச்சேரியை சேர்ந்த சுப்பையன் மகன் கனிராஜா (வயது 24). இவர் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். பின்னர், அந்த சிறுமியை அவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்று அவருடன் வாழ்ந்து வந்தார். இதில் கர்ப்பிணியான சிறுமிக்கு, சிறுமியின் பெற்றோர் வளைகாப்பு நடத்தி தங்களின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில், அவரை காதலித்து திருமணம் செய்த கனிராஜா, அவருடைய தாய் வசந்தி, சிறுமியின் தாய், தந்தை ஆகிய 4 பேர் மீதும் தேனி அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story