மேல்பூண்டி தக்கா ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தியாகதுருகம் அருகே மேல்பூண்டி தக்கா ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் உள்ள மேல்பூண்டி தக்கா ஏரிக்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு 22 கடை உரிமையாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவையர் நடராஜன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஏரி ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்தனர். பின்னர் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், இந்திராணி ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் சில கடையின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் 2 பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இதில் ஊராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த 2 கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டன. மீண்டும் ஏரியில் யாரும் ஆக்கிரமிக்காத வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 4 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சி வேல், சிவப்பிரகாசம், தயாபரன், உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ், கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் உடன் இருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story