திருப்புவனம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை


திருப்புவனம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 17 May 2022 12:00 AM IST (Updated: 17 May 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

திருப்புவனம், 
திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகமாக வெயில் அடித்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி மின்னலுடன் பலத்த மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் கிராமப் பகுதிகளில் சாலைகள், வயல்வெளி பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த மழையால் குடிநீர் கிணறுகளில் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நேற்று அதிகாலை பெய்த மழையால் வெயில் அகன்று குளுமை சூழ்ந்தது.
 பலத்த மழையால் நகர் பகுதியில் பல மணி நேரம் இரவு முதல் அதிகாலை வரை விட்டுவிட்டு மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். கிராமப்பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மின்வெட்டு நீடித்தது. இதனால் கிராமப் பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். நேற்று பெய்த மழையின் அளவு 70.60 மில்லி மீட்டர் ஆகும்.

Related Tags :
Next Story