வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2022 12:08 AM IST (Updated: 17 May 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேதாரண்யம்:
 வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள கத்தரிப்புலம், செட்டிப்புலம், ஆயக்காரன்புலம், தகட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நடந்து வரும் வீடு கட்டும் கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்னம்புலம், கருப்பன்காடு பகுதி வரை பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.596.43 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டார். தொடர்ந்து வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா, கொய்யா செடி நடவு வயல், தென்னை, முந்திரி ஒட்டுக்கன்றுகள், முருங்கை கன்றுகள் போன்றவைகள் உற்பத்தி செய்வதையும்  கலெக்டர் பார்வையிட்டார். 
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் ஜான்பிரிட்டோ, இளநிலை பொறியாளர் அருண்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story