பிள்ளையார்குளம் பஞ்சாயத்தில் முறைகேடு நடப்பதாக உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார்
பிள்ளையார்குளம் பஞ்சாயத்தில் முறைகேடு நடப்பதாக உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.
விருதுநகர்,
பிள்ளையார்குளம் பஞ்சாயத்தில் முறைகேடு நடப்பதாக உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.
முறைகேடு
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார்குளம் பஞ்சாயத்து தலைவர் துணைத்தலைவர் மற்றும் செயலர் ஆகிய மூவரும் இணைந்து பஞ்சாயத்து கூட்டத்தில் வேலைகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றினாலும் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமல் தீர்மானத்தை முறைகேடாக பயன்படுத்தும் நிலை உள்ளது. பஞ்சாயத்து வரிவசூல் முறையாக செய்யாததாலும், வசூலித்த பணத்தை முறையாக வங்கியில் செலுத்துவதும் இல்லை. முறையாக பதிவேடுகளை பராமரிப்பதும் இல்லை. எனவே இது குறித்து விசாரணை நடத்தி தலைவர், துணைத்தலைவர் மற்றும் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்த அய்யம்மாள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ரே.மடத்துபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக பஞ்சாயத்து கூட்டமைப்பு குழுவால் பணியமர்த்தப்பட்டுள்ள புதிய பணியாளர்கள் பணி செய்து வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளதால் அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு
தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், வெம்பக்கோட்டை தாலுகா நதிகுடி கிராமத்தில் இருந்து துரைசாமிபுரம் வரை விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிபாதையினை பட்டாசு ஆலை, கல்குவாரி போன்றவைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
டாஸ்மாக் கடையால் பாதிப்பு
செங்கதிர் இயக்கத்தைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் துரையரசன் கொடுத்துள்ள மனுவில், முகவூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும், மாரியம்மன் கோவில், மருத்துவமனை மின்வாரிய அலுவலகம், ஆகியவற்றுக்குச் செல்லும் பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாலும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மயானத்திற்கு செல்லும் பாதை உள்ள நிலையில் மோதல் ஏற்படும் நிலை உள்ளதாலும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும் சேத்தூர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பண்டாரக்கிழவன் கோவிலில் சுந்தரராஜபுரம், சேத்தூர், முத்துசாமிபுரம், தளவாய்புரம் ஆகிய கிராமங்களில் இருந்து பல தலைமுறைகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில் வனத்துறையினர் கோவிலில் வழிபாடு நடத்த முடியாமல் குழிவெட்டி தடுத்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் வழிபாடு செய்யவரும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை அவதூறாக வனத்துறை அதிகாரிகள் பேசுவதாகவும், எனவே வழிபாடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story