முசிறியில் தனியார் நிறுவன பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் திருட்டு

முசிறியில் தனியார் நிறுவன பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 17 May 2022 12:55 AM IST (Updated: 17 May 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

முசிறியில் தனியார் நிறுவன பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சத்தை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

முசிறியில் தனியார் நிறுவன பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சத்தை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருட்டு
முசிறி-துறையூர் ரோட்டில் தனியார் கூரியர் நிறுவனம் உள்ளது. இங்கு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம ஆசாமிகள் அந்த நிறுவனத்தின் இரும்பு கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 960-ஐ திருடி சென்று விட்டனர். இது குறித்து நிறுவன மேலாளர் கொடுத்த  புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story