தினத்தந்தி புகார் பெடடி


தினத்தந்தி புகார் பெடடி
x
தினத்தந்தி 17 May 2022 1:00 AM IST (Updated: 17 May 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

வேகத்தடை வேண்டும்
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை பஸ்நிறுத்தம் அருகே சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இந்த பஸ்நிறுத்தம் அருகே 2 அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையம் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இதனால் சாலை எப்பொழுதும் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த நிலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்கள்வேகமாக செல்வதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?   -அஸ்வின், நாஞ்சிக்கோட்டை.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி தாராசுரம் - சுவாமிமலை சாலை வளையப்பேட்டை மாங்குடி நடுத்தெருவில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. அதுமட்டுமின்றி மின்கம்பத்தின் அடிப்பகுதியில் இரும்பு கம்பிகள் துருபிடித்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வலையப்பேட்டை மாங்குடி.
சாலை வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதி மாரனேரி கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சேறும், சகதியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?  -ராஜமாணிக்கம், மாரனேரி.
சுகாதார சீர்கேடு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி கிராமத்தில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருவலஞ்சுழி.


Next Story