2 குளங்களில் மீன்பிடி திருவிழா


2 குளங்களில் மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 17 May 2022 1:14 AM IST (Updated: 17 May 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

2 குளங்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

விராலிமலை:
விராலிமலை அருகே விருதாப்பட்டி, பொருவாய் ஆகிய ஊர்களில் உள்ள பெரியகுளங்களில் நேற்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதனையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து கரையில் காத்திருந்த பொதுமக்கள் வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்டவைகளை கொண்டு குளத்திற்குள் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் அயிரை, விரால், கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அதனை எடுத்து சென்றனர்.

Next Story