தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஏஜென்சி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஏஜென்சி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஏஜென்சி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஏஜென்சி உரிமையாளர்
நாகர்கோவில் கோட்டார் வடக்கு ரதவீதியை சோ்ந்தவர் சுப்பைய்யா (வயது 58). இவருக்கு திருமணமாகி ஜெகன் மற்றும் கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். சுப்பைய்யா கோட்டார் பகுதியில் குளிர்பானம் மற்றும் பிஸ்கட் ஆகிய உணவு பொருட்களை கடைகளில் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார்.
கொரோனா காலக்கட்டத்தில் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், நாளுக்கு நாள் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்பைய்யா நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
சாவு
உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் கோகுல் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story