இன்ஸ்பெக்டரிடம் 5 பவுன் கைச்சங்கிலி திருட்டு


இன்ஸ்பெக்டரிடம் 5 பவுன் கைச்சங்கிலி திருட்டு
x
தினத்தந்தி 17 May 2022 3:24 AM IST (Updated: 17 May 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்பெக்டரிடம் 5 பவுன் கைச்சங்கிலி திருட்டு

மதுரை
மதுரை மீனாம்பாள்புரம், கல்யாணசுந்தரம் 8-வது தெருவை சேர்ந்தவர் தங்கமணி(வயது 37). இவர் தெப்பகுளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார். சம்பவத்தன்று இவரது மகன்களுக்கு ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காதுகுத்து விழா நடத்தினார். அதற்காக அங்கு தண்ணீர் கேன்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை இறக்கும் பணியில் தங்கமணி மற்றும் உறவினர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க கைசங்கிலியை திடீரென காணவில்லை. அதை மண்டபம் முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் அதனை கண்டு பிடிக்க முடியவில்லை. யாரோ மர்மநபர்கள் அவரது கைச்சங்கிலியை திருடி சென்றிருக்கலாம் என்பது தெரியவந்தது. இது குறித்து தங்கமணி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story