‘செஸ்காம்' என்ஜினீயரை மிரட்டி ரூ.3¾ லட்சம் தங்கநகைகள் பறிப்பு-மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


‘செஸ்காம் என்ஜினீயரை மிரட்டி ரூ.3¾ லட்சம் தங்கநகைகள் பறிப்பு-மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 May 2022 3:26 AM IST (Updated: 17 May 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

குடிபண்டே அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ‘செஸ்காம்' என்ஜினீயரை மிரட்டி ரூ.3¾ லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

சிக்பள்ளாப்பூர்: குடிபண்டே அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ‘செஸ்காம்' என்ஜினீயரை மிரட்டி ரூ.3¾ லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 
செஸ்காம்’ என்ஜினீயரை மிரட்டி...

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே டவுனை சேர்ந்தவர் ஸ்ரீவத்சலா. இவர், சிக்பள்ளாப்பூரில் உள்ள செஸ்காம் மின்வாரியத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வத்சலா, தனது மவைவி மற்றும் குழந்தையுடன் பாகேப்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குடிபண்டே அருகே அம்பசந்திரா அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது ஸ்ரீவத்சலாவின் மோட்டார் சைக்கிள் குறுக்கே திடீரென கார் ஒன்று வந்து நின்றது.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவத்சலா மோட்டார் சைக்கிளை உடேன நிறுத்தினார். இதையடுத்து காரில் இருந்து முகமூடி அணிந்தபடி மர்ம நபா்கள் 5 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினார்கள். பின்னர் அவர்கள், ஸ்ரீவத்சலாவை கத்தியை காட்டி மிரட்டி கணவன், மனைவி அணிந்திருந்த 78 கிராம் தங்கநகைகளை பறித்தனர். இதையடுத்து அந்த நகைகளுடன் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.3.83 லட்சம் இருக்கும். 

வலைவீச்சு

இதனால் ஸ்ரீவத்சலா செய்வதறியாது திகைத்தார். இதுகுறித்து அவர், குடிபண்டே போலீசில் புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story