எஸ்.எஸ்.எல்.சி. பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் உரை இடம்பெற்றிருப்பதில் தவறு இல்லை என மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்
எஸ்.எஸ்.எல்.சி.பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் உரை இடம்பெற்றிருப்பதில் தவறு இல்லை-மந்திரி பி.சி.நாகேஸ்
பெங்களூரு: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. கன்னட பாடபுத்தகத்தில் ஆர்.எஸ். எஸ். நிறுவனர் கேசவ் பலராம் ஹெட்கேவார் சம்பந்தப்பட்ட பேச்சு மற்றும் உரை இடம்பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த அமைப்புகள் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வரலாறு இடம்பெறவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதுதொடர்பாக துமகூரு மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவார் பேசும் உரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் விதமாக அவரது பேச்சு உள்ளதால் அந்த உரை மட்டும் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது உரையில் சமூகம் மற்றும் தேசத்தை பற்றி கூறியுள்ளார். பாட புத்தகத்தை முழுமையாக படிக்காமல் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. சிலர் எதற்கெடுத்தாலும் எதிர்ப்புகள் தெரிவிக்க தான் செய்வார்கள். சமூகம் மற்றும் தேசத்தைப் பற்றி பேசிய உரை பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதில் தவறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story