வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை
வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் ஊராட்சியில் கீழத்தெரு, மேலத்தெரு மற்றும் வடக்கு தெரு உள்ளது. இதில் வடக்கு தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனர். இந்த தெருவில் வடிகால் வசதி இல்ைல. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் போது சிந்தும் தண்ணீர் சாைலயில் செல்கிறது. ேமலும் மழை பெய்யும் போது மழை நீரும் சாைலயில் செல்கிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் வேலைகளுக்கு செல்லும்போதும், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக வருபவர்கள் தண்ணீரில் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.