படைக்கலனை தணிக்கை குழு முன்பு ஆஜர்படுத்த வேண்டுகோள்
படைக்கலனை தணிக்கை குழு முன்பு ஆஜர்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் காலங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும், தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நல்லமுறையில் நடத்திட மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கலன் (ஆயுதங்கள்) உரிமம் பெற்ற உரிமைதாரர்கள் அனைவரும் தங்களது படைக்கலனை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையில் இயங்கும் படைக்கலன் தணிக்கை குழுவின் முன்பாக ஆஜர்படுத்தி தணிக்கை செய்திட வேண்டும். இவ்வாறு தணிக்கை குழு முன்பு ஆஜர்படுத்தாமல் வைத்திருக்கும் படைக்கலன்களை உரிமைதாரர்கள், உடனடியாக தணிக்கை குழுவின் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு ஆஜர்படுத்தாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.