விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 May 2022 10:04 PM GMT (Updated: 2022-05-17T03:34:50+05:30)

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செந்துறை:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் தமிழினி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், தனது காரில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றார். மருதூர் ஏரிக்கரை அருகே சென்றபோது அப்பகுதியை சேர்ந்த வாலிபர் கண்ணன் என்பவர், காரை வழிமறித்து தகராறு செய்து ஆபாசமாக பேசி காரில் இருந்த கட்சிக்கொடியை கழற்றி வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இளையபாரதி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story