கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்-கலெக்டர் தலைமையில் நடந்தது
கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு வகையான உதவி தொகை, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, சாலை வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 271 மனுக்களை கொடுத்தனர்.
இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி கிராமத்தில் ஆதரவற்ற நிலையில் நிழற்கூடத்தில் தங்கி இருந்த நடராஜன் என்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்.
வீடு கட்டி தர நடவடிக்கை
மேலும் இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story