4 திருமணத்தை மறைத்ததாக போலீஸ் ஏட்டு மீது 5-வது மனைவி புகார்


4 திருமணத்தை மறைத்ததாக போலீஸ் ஏட்டு மீது 5-வது மனைவி புகார்
x
தினத்தந்தி 17 May 2022 3:56 AM IST (Updated: 17 May 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

4 திருமணத்தை மறைத்ததாக போலீஸ் ஏட்டு மீது 5-வது மனைவி புகார் அளித்துள்ளார்

பெங்களூரு: பெங்களூருவில் சிறப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் பி.எம்.பாபு. இவர் மீது மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீலிடம் பி.எம்.பாபுவின் மனைவி புகார் அளித்தார். அந்த புகாரில். ‘எனது கணவர் பி.எம்.பாபுவுக்கு ஏற்கனவே 4 முறை திருமணம் நடந்து உள்ளது. ஆனால் தனக்கு 4 முறை திருமணம் நடந்ததை அவர் என்னிடம் இருந்து மறைத்து 5-வதாக திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி எனக்கு தெரிந்ததும் நான் அவரிடம் கேட்டேன். 

அதுமுதல் எனக்கும், எனது மகளுக்கும் பி.எம்.பாபு மனரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்துவதாக துணை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். போலீஸ் ஏட்டு மீது 5-வது மனைவி புகார் அளித்த சம்பவம் பெங்களூரு போலீஸ்காரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story