என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 May 2022 4:28 AM IST (Updated: 17 May 2022 4:28 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:

சேலம் மெய்யனூர் அர்த்தனாரி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகன் சச்சின் (வயது 26), என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சச்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் சச்சின், ஏற்காட்டை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து உள்ளார். நேற்று முன்தினம் காதலியுடன் செல்போனில் பேசியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த சச்சின் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story