வேம்பனேரி அய்யனாரப்பன் கோவிலில் திருவிழா


வேம்பனேரி அய்யனாரப்பன் கோவிலில் திருவிழா
x
தினத்தந்தி 17 May 2022 5:02 AM IST (Updated: 17 May 2022 5:02 AM IST)
t-max-icont-min-icon

வேம்பனேரி அய்யனாரப்பன் கோவிலில் திருவிழா நடந்தது.

எடப்பாடி:

எடப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவிலில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், விசேஷ பூஜைகளும், சாமி ஊர்வலமும் நடந்தன. நேற்று முன்தினம் பெண்கள் மாவிளக்கு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். மேலும் வேம்பனேரி, புதுப்பாளையம், சினைமுத்தாயம்பட்டி, பெரியமுத்தாயம்பட்டி, காட்டூர், கருப்பன் தெரு ஆகிய ஊர்களின் வழியாக சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் சாமிக்கு தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நேற்று கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story