திருவள்ளூர் அருகே ஓடும் ரெயிலில் ஏறமுயன்ற வாலிபர் தவறி விழுந்து சாவு
திருவள்ளூர் அருகே ஓடும் ரெயிலில் ஏறமுயன்ற வாலிபர் நிலைத்தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தரணிவராகபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்குமார் (வயது 22). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.
இவர் நேற்று காலை திருத்தணியில் இருந்து திருவள்ளூரில் உள்ள தனியார் நிருவன நேர்காணலில் கலந்து கொள்வதற்காக மின்சார ரெயிலில் வந்துக்கொண்டு இருந்தார். ஏகாட்டூர்-திருவள்ளூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சிக்னலுக்காக நின்றது.
அப்போது ரெயிலில் இருந்த அருண்குமார் கீழே இறங்கி உள்ளார். சிக்னல் கிடைத்தவுடன் ரெயில் மீண்டும் புறப்பட்டது. இதனையடுத்து அருண்குமார் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். இதில் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story