தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைதுசெய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எட்டயபுரம் ரோடு மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் தூத்துக்குடி மங்களபுரத்தை சேர்ந்த மணி மகன் முருகன் (வயது 52) என்பவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். உடனடியாக போலீசார் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 113 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,500-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story