வெங்கடேஸ்வரபுரம் காவடிபிறை முருகன் கோவிலில் சித்திரை குருபூஜை விழா

வெங்கடேஸ்வரபுரம் காவடிபிறை முருகன் கோவிலில் சித்திரை குருபூஜை விழா
x
தினத்தந்தி 17 May 2022 5:42 PM IST (Updated: 17 May 2022 5:42 PM IST)
t-max-icont-min-icon

வெங்கடேஸ்வரபுரம் காவடிபிறை முருகன் கோவிலில் சித்திரை குருபூஜை விழா நடைபெற்றது.

சாத்தான்குளம்:
வெங்கடேஸ்வரபுரம் காவடிபிறை முருகன் கோவிலில் சித்திரை குருபூஜை விழா நடைபெற்றது.
பூஜையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்தும், ஸ்ரீவைகுண்டம் தாமிபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், விநாயகர் முருகன், இடும்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 108 வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், காவடிபிறை முருகனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜை, சிறப்பு பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

Next Story