மாணவர்கள் அன்றாட அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்: மத்திய பல்கலை துணை வேந்தர் எம்.கிருஷ்ணன்


மாணவர்கள் அன்றாட அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்: மத்திய பல்கலை துணை வேந்தர் எம்.கிருஷ்ணன்
x
தினத்தந்தி 17 May 2022 5:49 PM IST (Updated: 17 May 2022 5:49 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் அன்றாட அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி:
மாணவர்கள் அன்றாட அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறினார்.
இளம் விஞ்ஞானிகள் முகாம்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஆகியவை இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இளம் விஞ்ஞானிகள் முகாமை காமராஜ் கல்லூரியில் நடத்தியது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
தொழில் நுட்பம்
அப்போது, மாணவ, மாணவிகள் அனைவரும் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் எளிமை, எண்ணம், உயர்ந்த சிந்தனைகளைப் போன்று வளர வேண்டும். தற்போதைய அறிவியல் தொழில்நுட்பத்தை முன்பே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். எனவே, மாணவ, மாணவிகள் அனைவரும் அன்றாட அறிவியல் குறித்த தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். 
அறிவியல் முகாம்களில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருந்து இன்னும் பல விஞ்ஞானிகள் வர வேண்டும். விருப்பமான துறைகளில் கடின உழைப்புடன் செயல்பட்டாலே சாதிக்க எளிதாக இருக்கும். முகாமில் கிடைக்கும் கருத்துகளை உள்வாங்கி தங்களது வாழ்வின் அனைத்து இடங்களிலும் செயல்படுத்தினால் புதிய எண்ணங்கள் மூலம் விஞ்ஞானிகளாக வளர முடியும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் முகாம் ஒருங்கிணைப்பாளர் கோ.நாராயணசாமி, கூடுதல் ஒருங்கிணைப்பாளர் ஜெ.நாகராஜன் மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, மாணவ, மாணவிகள் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.

Next Story