நாசரேத் தூயயோவான் பேராலய பிரதிஷ்டை அசன பண்டிகை


நாசரேத் தூயயோவான் பேராலய பிரதிஷ்டை அசன பண்டிகை
x
தினத்தந்தி 17 May 2022 6:04 PM IST (Updated: 17 May 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத் தூயயோவான் பேராலய பிரதிஷ்டை அசன பண்டிகை கொண்டாடப்பட்டது.

நாசரேத்:
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தலைமை பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலய 94-வது பிரதிஷ்டை அசன பண்டிகை விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் பேராலய மைதானத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் இயேசுவுக்காக குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 
மூன்றாம் நாள் குடும்ப உபவாச கூடுகை ஆலயத்தில் நடைபெற்றது. அன்று இரவு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, பாடகர் குழு சிறப்பு பாடல்கள் நடைபெற்றது. மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரதிஷ்டை விழா அசன பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அசன வைபவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய தலைமை குருவானவர் ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமையில் உதவி குருவானவர் ஜெபஸ்டின் தங்கபாண்டி மற்றும் அசனகமிட்டியினர்,  பேராலய சபை மக்கள் செய்திருந்தனர்.

Next Story