லாரியில் இருந்து குதித்த டிரைவர் சாவு


லாரியில் இருந்து குதித்த டிரைவர் சாவு
x
தினத்தந்தி 17 May 2022 6:26 PM IST (Updated: 17 May 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே லாரியில் இருந்து குதித்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூசி

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகா பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழன் (வயது 31). லாரி டிரைவரான இவர், திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள ஏழாச்சேரி பகுதிக்கு லாரியை ஓட்டி வந்தார். 

அங்குள்ள எடை மேடைக்கு லாரியை ஓட்டிச்சென்ற போது லாரி நிலைதடுமாறியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் முத்தமிழன் லாரியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. அப்போது கீழே இருந்த கல் மேல் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். 

இதுகுறித்து அவரது தம்பி செந்தமிழன் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story