வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் தம்பதி மனு
வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் தம்பதி மனு தாக்கல் செய்து உள்ளனர்.
மும்பை,
வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் தம்பதி மனு தாக்கல் செய்து உள்ளனர்.
வாடகை தாய் குழந்தை
வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, வாடகை தாய் சட்டம் கடந்த ஜனவரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாத தம்பதியினர் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும். மேலும் வாடகை தாயாக இருப்பவர், தம்பதியின் உறவினராகவும் அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்க வேண்டும்.
இதேபோல திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் நபர்கள், தனியாக வசிக்கும் நபர்கள் யாரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியாது. மேலும் இதுதவிர வாடகை தாய் முறைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் புதிய சட்டத்தில் இடம்பெற்று உள்ளது.
தம்பதி மனு
இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற திட்டமிட்டு இருந்த தம்பதி மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுவில், "வாடகை தாய் சட்டம் அமலுக்கு வருதற்கு முன்பே நாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் செயலை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடங்கிவிட்டோம். எனவே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கருமுட்டையை வேறு கருத்தரிப்பு மையத்திற்கு கொண்டு செல்ல இடைக்கால அனுமதி வழங்க வேண்டும்" என கூறியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை நாளை(புதன்கிழமை) மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் சாம்ரே அடங்கிய விடுமுறைகால அமர்வு முன் நடக்க உள்ளது.
Related Tags :
Next Story