குன்னூரில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை ஆய்வாளர் கைது


குன்னூரில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை ஆய்வாளர் கைது
x
தினத்தந்தி 17 May 2022 8:29 PM IST (Updated: 17 May 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி

குன்னூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆப்பிள் பீ பகுதியை சேர்ந்தவர் நித்யா (வயது 38). இவர் மாநில நெடுஞ்சாலை துறையில் சாலை ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். கோவையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான இடம் குன்னூர் பெட்டட்டியில் நெடுஞ்சாலையை யொட்டி அமைந்துள்ளது. அங்கு நெடுஞ்சாலையை யொட்டி செந்தில் முருகன் தடுப்புச்சுவர் அமைத்துள்ளார். 
அப்போது இது ஆக்கிரமிப்பு என கூறி தடுப்பு சுவர் இடிக்கப்பட்டது. மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்க அவர் அனுமதி கேட்டு உள்ளார். அப்போது நெடுஞ்சாலை ஆய்வாளர் நித்யா, ரூ.5 ஆயிரம் தந்தால் அனுமதி அளிப்பதாக கூறியதாக தெரிகிறது. 

ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள்

இதுகுறித்து செந்தில் முருகன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆய்வாளர் நித்யாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையில் போலீசார் நித்தியாவை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் ரவத்து நித்யாவிடம் விசாரணை நடந்து வருகிறது. 

Next Story