தூத்துக்குடியில் 2வது ரெயில்வே கேட் பாதை மூடல்


தூத்துக்குடியில் 2வது ரெயில்வே கேட் பாதை மூடல்
x
தினத்தந்தி 17 May 2022 8:47 PM IST (Updated: 17 May 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 2வது ரெயில்வே கேட் பாதை மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி 2-வது ரெயில்வே கேட் அருகே மாநகராட்சி சார்பில் வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனால் 2-ம் கேட் வழியாக செல்லும் பாதை முழுமையாக தடுப்புகள் வைத்து மூடப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். தொடர்ந்து விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story