குரூப் 2 தேர்வை நீலகிரி மாவட்டத்தில் 5633 பேர் எழுதுகின்றனர்
நீலகிரி மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதி, 5633 பேர் குரூப்-2 தேர்வு எழுதுகின்றனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதி, 5633 பேர் குரூப்-2 தேர்வு எழுதுகின்றனர்.
குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 மற்றும் குரூப் -2ஏ பதவிகளுக்கான எழுத்து தேர்வு வருகிற 21-ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் 9 மையங்களில் 2,550 பேரும், குன்னூரில் 5 மையங்களில் 1,544 பேரும், கூடலூரில் 5 மையங்களில் 1,539 பேரும் என மொத்தம் 5,633 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வினை கண்காணிக்க 4 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வுக்கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை தாசில்தார் நிலையில் மொத்தம் 7 குழுக்கள் உள்ளன.
குற்றவியல் நடவடிக்கை
தேர்வுக் கூடங்களில் தேர்வினை கண்காணிக்க சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் நிலையில் மொத்தம் 31 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தேர்வு மையகளுக்கு செல்ல ஊட்டி பஸ் நிலையத்திலிருந்து காலை 8 மணி முதல் 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தேர்வு அறைகளுக்கு செல்லும் போது தேர்வர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அனுப்பப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டால் தேர்வரை தனி அறையில் தேர்வு எழுத தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் அனைவரும்; கட்டாயம் முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், அனைத்து மையங்களின் நுழைவு வாயில்களில் மற்றும் தேர்வு அறைகளில் கிருமி நாசினி வைக்கப்பட்டு உள்ளது. பார்வையற்றோர் களுக்கான தேர்வு நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது. தேர்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுகூடங்களுக்கு மொபைல் போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கை கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.
Related Tags :
Next Story