ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சீவி ராஜ் தலைமை தாங்கினார். இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:- கடந்த 2003-ம் ஆண்டு முதல் அமல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், நூலக செயலாளர்கள், ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி 70 வயது பூர்த்தியான அனைவருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை நிலுவையில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை 1-1-2022 முதல் அனைவருக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் மாவட்ட செயலாளர் நாகராஜன், பொருளாளர் பெரியய்யா, துணை தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்ததால் அனைவரும் குடைகளுடன் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story