டெங்கு பாதிப்பை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்


டெங்கு பாதிப்பை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 17 May 2022 9:55 PM IST (Updated: 17 May 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

வா.சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு பாதிப்பை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

சுல்தான்பேட்டை

ஆண்டுதோறும் மே 16-ந் தேதி தேசிய டெங்கு தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சுல்தான்பேட்டை ஒன்றியம் வா.சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைவரும் கைகோர்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. 

கருத்தரங்கிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து பொதுமக்கள், பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் பதிலளித்து பேசினார். கருத்தரங்கில் அரசு டாக்டர்கள் சபரிராம், சூர்யா, சுந்தர், கிருஷ்ண பிரபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ் மற்றும் துறை அலுவலர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

முடிவில் சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உள்பட 22 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த  சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story