கெடார் அருகே பஸ் மோதி மீன் வியாபாரி பலி


கெடார் அருகே  பஸ் மோதி மீன் வியாபாரி பலி
x
தினத்தந்தி 17 May 2022 10:04 PM IST (Updated: 17 May 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

கெடார் அருகே பஸ் மோதி மீன் வியாபாரி பலியானார்.

செஞ்சி, 
விழுப்புரம் அருகே உள்ள காணை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் (வயது 65), மீன் வியாபாரியான இவர் மீன் வாங்குவதற்காக இன்று அதிகாலை 3.30 மணிக்கு தனக்கு சொந்தமான மொபட்டில் உடையானத்தம் ஏரிக்கு புறப்பட்டார். கெடார் அருகே சென்றபோது, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பின்னால் வந்த தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிச்சைக்காரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story