பதுக்கல் காரணமாக பஞ்சு விலை உயர்ந்துள்ளது
பதுக்கல் காரணமாக பஞ்சு விலை உயர்ந்துள்ளது என்று கோவையில் நடைபெற்ற தேசிய பஞ்சாலை தொழிலாளர்மாநாட்டில் சி.ஐ.டி.யு. செயலாளர் கருமலையான் பேசினார்.
கோவை
பதுக்கல் காரணமாக பஞ்சு விலை உயர்ந்துள்ளது என்று கோவையில் நடைபெற்ற தேசிய பஞ்சாலை தொழிலாளர்மாநாட்டில் சி.ஐ.டி.யு. செயலாளர் கருமலையான் பேசினார்.
தேசிய மாநாடு
கோவை மசக்காளிப்பாளையம் பகுதியில் தனியார் மண்டபத்தில் சி.ஐ.டி.யு பஞ்சாலை விசைத்தறி தொழிலாளர் தேசிய சிறப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு அகில இந்திய தலைவர் ஹேமலதா, துணைத்தலைவர் பத்மநாபன், செயலாளர் கருமலையான், மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், பி.ஆர்.நடராஜன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் தற்போதைய விசைத்தறி தொழிற்சாலைகள், பஞ்சாலைகளின் நிலை, குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் அகில இந்திய செயலாளர் கருமலையான் நிருபர்களிடம் கூறியதாவது:-
பதுக்கல்
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி நூற்பாலை தொழில் பெரும்பாலான அந்நிய செலாவாணியை ஈட்டி கொடுக்கிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 கோடி பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களது பணி நிலைமை வாழ்வாதார நிலைமை குறித்து அறிவதற்காக தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. விசைத்தறியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் கிடையாது.
பஞ்சு பற்றாக்குறையில் திருட்டு தனம் நடந்து வருகிறது. இது உற்பத்தி குறைவால் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. பதுக்கல் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை.
உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
பஞ்சு பற்றாக்குறையால் இந்தியாவில் தேவையான நூலை நாம் இன்னும் உற்பத்தி செய்யவில்லை. எனவே உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிடைக்கின்ற நூலை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.
தேசிய பஞ்சாலைகளை பொருத்தவரை மத்திய அரசு கொரோனாவை காரணம் காட்டி மூடிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. உலக அளவில் இவ்விவகாரம் குறித்து கவனத்தை ஈர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாக்க நடவடிக்கை
பொதுசெயலாளர் சுகுமாறன் பேசும் போது, மோடி அரசு வரும் போது இந்த தொழிலை காக்கும் என நம்பிய சிறு குறு முதலாளிகள்தான் தற்போது சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அதற்கு காரணம் மத்திய அரசு தற்போது கடைபிடித்து வரும் கொள்கைதான்.
எனவே இந்த கொள்கைகளை கைவிட்டு இந்த தொழிலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story