ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
மேலகரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது.
தென்காசி:
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி வட்ட கிளையின் 26-வது ஆண்டு பேரவை மற்றும் தென்காசி மாவட்ட 2-வது ஆண்டு பேரவை கூட்டம் மேலகரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அய்யப்பன் வரவேற்றார். செங்கோட்டை கிளை துணைத்தலைவர் பண்டாரம் தொடங்கி வைத்தார். செயலாளர்கள் பிரமநாயகம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆண்டறிக்கையையும், இப்ராகிம், சின்னசாமி ஆகியோர் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சங்கரன்கோவில் கிளை தலைவர் குருசாமி, தென்காசி கிளை தலைவர் குத்தாலிங்கம், நெல்லை மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நெல்லை மாவட்ட இணை செயலாளர் ஜோசப் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் முத்து முகமது நிறைவுரையாற்றினார்.
கூட்டத்தில் திருச்செந்தூர்-அம்பை கிழக்கு கடற்கரை தொழில்துறை தாழ்வாரம் அமைப்பதை தென்காசி வரை நீட்டித்து தென்காசி மாவட்டத்தை தொழில் மையமாக்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். தென்காசி விரிவாக்க பகுதியான சக்தி நகர், கே.ஆர்.நகர், வீட்டுவசதி வாரிய பகுதி ஆகியவற்றில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தணிக்கையாளர் முகமது ஜலீல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story