மயானத்தை ஆக்கிரமித்து நாய்கள் தகன மேடை அமைக்க எதிர்ப்பு


மயானத்தை ஆக்கிரமித்து நாய்கள் தகன மேடை அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 May 2022 10:25 PM IST (Updated: 17 May 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி பகுதியில் மயானத்தை ஆக்கிரமித்து நாய்கள் தகன ேமடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வீரபாண்டி
வீரபாண்டி பகுதியில்  மயானத்தை ஆக்கிரமித்து நாய்கள் தகன ேமடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
மாநகராட்சி நிலம்
 வீரபாண்டி பலவஞ்சிபாளையம் செல்லும் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், உரம் உற்பத்தி நிலையம் மற்றும் 3 மேல் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. அதே இடத்துக்கு பின்புறமாக நாய் தகனமேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாய்கள் தகன மேடை அமைக்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இது பற்றி தகவலறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி  54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் தலைமையில் அப்பகுதி  பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளையும், ஊழியர்களையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்ேபாது  “ பல ஆண்டுகளாக அந்த பகுதியை மயானமாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது மாநகராட்சி நிர்வாகம் மயான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ததோடு கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இறந்தவர்களிடம் உடல்களை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  மயானத்திற்கு இடத்தை ஒதுக்கி பிறகு பணிகளை தொடர வேண்டும். என்றனர். 
பேச்சுவார்த்தை 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் அங்கு வந்த மாநகராட்சி துணைமேயர் பாலசுப்பிரமணியம் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கருத்து கேட்ட பிறகு பணிகளை தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைவில் பொதுமக்களுக்கு மயானத்திற்கான நிலத்தை ஒதுக்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டுச் சென்றனர். 

Next Story