வேலூர் மாவட்டத்தில் 52 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்


வேலூர் மாவட்டத்தில் 52 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 17 May 2022 10:52 PM IST (Updated: 17 May 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 52 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 52 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 52 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார். 
அதன்விவரம் வருமாறு:-

வேலூர் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் சத்துவாச்சாரிக்கும், வடக்கு போலீஸ் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார் லத்தேரிக்கும், பாலவெங்கடராமன் காட்பாடிக்கும், தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி குடியாத்தம் டவுனுக்கும், பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் மேல்பாடிக்கும், ஏழுமலை திருவலத்துக்கும், திருநாவுக்கரவு குடியாத்தம் தாலுகாவிற்கும், ஜெகதீசன் குடியாத்தம் டவுனுக்கும், அரியூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை வேலூர் தெற்கு குற்றப்பிரிவுக்கும், மதன்குமார் சிறப்பு குற்ற தனிப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

52 சப்-இன்ஸ்பெக்டர்கள்

இதேபோன்று வேலூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் மேல்பாடிக்கும், சத்தியவாணி வேலூர் அனைத்து மகளிருக்கும், விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வேலூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கும், பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர்கள் சிங்காரம் பேரணாம்பட்டுக்கும், விக்னேஷ் அணைக்கட்டுக்கும், கண்ணன் சத்துவாச்சாரிக்கும், வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன் குடியாத்தம் டவுனுக்கும், பத்மநாபன் வேலூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் உள்பட பொன்னை, பனமடங்கி, லத்தேரி, கே.வி.குப்பம், மாவட்ட குற்றப்பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த 52 சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story