புஞ்சைபுளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாக வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது


புஞ்சைபுளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாக வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 17 May 2022 10:52 PM IST (Updated: 17 May 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாக வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஆம்புலன்ஸ் டிரைவர் உயிர் தப்பினார்

புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த நிலைய வளாகத்தில் அங்கு பணியாற்றுபவர்களுக்கான குடியிருப்பும் உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள பயன்படாத ஒரு வீட்டில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்கி ஓய்வு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினமும் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்கி ஓய்வு எடுக்கும் வீட்டின் மேற்கூரையின் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது.  இதில் அந்த வீட்டில் உள்ள கட்டிலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவரான துவாரகேஸ் (வயது 28) என்பவர் லேசான காயம் அடைந்தார். உடனே அவர் அரசு ஆரம்ப  சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Next Story