விளவங்கோடு தாலுகாவில் மழைக்கு வீடு சேதம்


விளவங்கோடு தாலுகாவில் மழைக்கு வீடு சேதம்
x
தினத்தந்தி 17 May 2022 11:06 PM IST (Updated: 17 May 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

விளவங்கோடு தாலுகாவில் மழைக்கு வீடு சேதம்

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழை, தக்கலை-3, மாம்பழத்துறையாறு-1.4, கோழிப்போர்விளை-4, முள்ளங்கினாவிளை-3.6, ஆனைகிடங்கு-1.2 மி.மீ.  என்ற அளவில் பதிவாகி இருந்தது. மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 287 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 231 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 40 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 58 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.65 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் 1-ந் தேதியன்று பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தற்போது 42 அடியை பேச்சிப்பாறை அணை தாண்டிவிட்டது. எப்படியும் ஒரு பலத்த மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் 45 அடியை எட்டிவிடும். அவ்வாறு பேச்சிப்பாறை அணை 45 அடியை எட்டும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். எனவே இந்த ஆண்டு பேச்சிப்பாறை அணை முன்கூட்டியே திறக்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடு பகுதி அளவுக்கு சேதம் அடைந்துள்ளது.

Next Story