ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 11:47 PM IST (Updated: 17 May 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும், அலுவலர்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் எழுத்து மூலம் தெரிவிக்கும்படியும் கூறினார்.

 அதன்படி பணிமாறுதல், பணி வரன்முறை, தகுதிக்காண் பருவம், முதுநிலை மாற்றம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல் போன்ற பணி சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக 137 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உடனடியாக மாவட்ட கலெக்டர் மோகன் பரிசீலனை செய்து 35 மனுக்களுக்கு தீர்வு செய்யப்பட்டு உரிய உத்தரவு வழங்கினார். பிற மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், தகுதியின் அடிப்படையில் உத்தரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், செயற்பொறியாளர் வெண்ணிலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story