கீழடியில், பழங்கால சில்லுவட்டுகள் கண்டெடுப்பு


கீழடியில், பழங்கால சில்லுவட்டுகள் கண்டெடுப்பு
x

கீழடியில், பழங்கால சில்லுவட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

திருப்புவனம், 
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி. இங்கே ஏற்கனவே 7 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுகிறது. இங்கே ஏற்கனவே பாசிமணிகள், கண்ணாடி பாசி மணிகள், சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், பழங்கால செங்கல்கள், ஓடுகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய், சிறுவர்கள், பெண்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள் மனித உருவம் கொண்ட சுடுமண் சிற்பம் ஆகியவை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டதில் நேற்று பழங்கால சில்லு வட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஆழமாக குழிகள் தோண்டி பணிகள் செய்யும் போது இன்னும் அதிகமாக பொருட்கள் கிடைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story