இரும்பு கம்பிகளை திருடியவர் கைது
போடி அரசு குடியிருப்பு கட்டிட பகுதியில் இரும்பு கம்பிகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
போடி:
போடி புதூர் வலசைத்துறை பகுதியில் அரசு அடுக்குமாடி வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த கட்டிட பகுதியில் வைத்திருந்த இரும்பு கம்பிகளை வாலிபர் ஒருவர் திருடி சென்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை கையும்களவுமாக பிடித்து குரங்கணி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், போடி இந்திரா நகரை சேர்ந்த மலைராஜன் மகன் செல்வகுமார் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த இரும்பு கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவன மேலாளர் தேனி முல்லை நகரை சேர்ந்த வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story