ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவருக்கு வலைவீச்சு
மணல் திருடியதாக போலீசில் புகார் கொடுத்ததால் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவரை போலீசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் விஜயகுமாரி (வயது 48). இவருடைய கணவர் சுப்பிரமணியன். ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் யாரும் மணல் திருடக்கூடாது என ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மீறி அதே ஊரை சேர்ந்த விஜயன் என்பவர் மணல் திருடியதாக, ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த விஜயன், விஜயகுமாரி வீட்டுக்கு சென்று ஏன் என் மீது போலீசில் புகார் கொடுத்தாய் எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் அவரை தரக்குறைவாக திட்டி கையால் தாக்கி உள்ளார். இதுகுறித்து விஜயகுமாரி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story