நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 11:52 PM IST (Updated: 17 May 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம்:
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி குமாரபாளையத்தில் ஆனங்கூர் பிரிவு சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, நகர செயலாளர் என்.சக்திவேல், நகர குழு உறுப்பினர்கள் காளியப்பன், சண்முகம், மாதேஷ், பெருமாயி, விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகி வெங்கடேசன், சுமைப்பணி தொழிலாளர் சங்க செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், விசைத்தறி, கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட ஜவுளி தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். முடிவில் காந்தி சரவணன் நன்றி கூறினார்.

Next Story